தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி: இன்று ஒப்பந்தம் கையெழுத்து

டில்லி:

மிழகத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

தமிழக டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, மீத்தேன் வாயு எடுத்தல் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதற்கு தமிழக விவசாயிகள் அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் மத்திய அரசு தன்னிச்சையாக 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி உள்ளது.

எற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் காவிரி பாசன பகுதிகளில் 2 இடங்களில் ஹைட்ரோ காப்டன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது  இரண்டு இடங்களில் ஸ்டெர்லைட்  வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி  நிறுவனமும் ஹைட்ரோகார்பன் இயற்கை வாயுவை எடுக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்திகிறது.

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட  55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம்  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

சமீபத்தில் நெடுவாசல் என்ற கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.