Random image

ஸ்டெர்லைட்டை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க களமிறங்குகிறது வேதாந்தா நிறுவனம்…

டில்லி:

மிழகத்தில் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை காரணமாக பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தவும் அனுமதி வழங்கி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்குக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, மீத்தேன் வாயு எடுத்தல் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக விளைநிலங்கள், நிலத்தடி நீர் மட்டம்  பாதிக்கப்படுவதாக விவசாயிகள் போரக்கொடி தூக்கி வருகின்றனர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து அந்த பகுதி மக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.  காவிரி பாசன பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி  நிறுவனமும் ஹைட்ரோகார்பன் இயற்கை வாயுவை எடுக்க உள்ளன.

ஏற்கனவே, தூத்துக்குடியில்  நாசகார  ஸ்டெர்லைட் தாமிர ஆலையை ஏற்படுத்தி, உயிரிக்கொல்லி நோய்களை பரவி வந்த வேதாந்தா நிறுவனம், தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.