தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

துரை

கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக டாக்டர் பரமசிவம் உள்ளார்

இவர் தனது தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்தார்.

ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதாரப் பணியாளர்களுடன் சென்று கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்தார்

இந்நிலையில் பரமசிவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கார்ட்டூன் கேலரி