மீபத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் ம.ந.கூட்டணி சார்பாக ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர், கி. வீரலட்சுமி.
முகநூலில் அதி தீவிரமான கருத்துக்களை கொட்டி வருபவர் இவர். சிம்புவின் பீப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்தும் பரபரப்பைக் கிளப்பியவர்.  .
மூன்று மாதங்களுக்கு முன்புவரை, வைகோ விஜயகாந்த் உட்பட பலரையும் “தெலுங்கு வந்தேறிகள்.. “ என்று கடுமையாக விமரசித்தவர் இவர். இடையில் என்ன நடந்ததோ.. இவரைப்பிடித்துக்கொண்டுபோய், விஜயகாந்த் முன்னிலையில் நிறுத்தினார் வைகோ. அதோடு, தனது கட்சி சார்பாகவே பல்லாவரத்தில் வீரலட்சுமியை நிறுத்தினார்.
“தமிழ், தமிழர்” என்று அதுவரை முழங்கிவந்த வீரலட்சுமி, “திராவிடம், திராவிடர்” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியைச சேர்ந்தவர்கள், வீரலட்சுமியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். “பல்லாவரம் தொகுதியில் வீரலட்சுமி பத்து ஓட்டுகூட வாங்க மாட்டார்” என்று முகநூல் உட்பட வலைதளங்களில் எழுதி வந்தனர்.

வீரலட்சுமி - சீமான்
வீரலட்சுமி – சீமான்

பதிலுக்கு வீரலட்சுமியும் சீமானை சீண்ட ஆரம்பித்தார். “தமிழகத்தை தமிழரே ஆள வேண்டும் என்ற கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தின் மூன் தீக்குளிக்க நான் தயார். சீமானும் தீக்குளிக்க வருவாரா” என்று முகநூலிலேயே சவால் விட்டார் வீரலட்சுமி.
மேலும்,  “நாம் தமிழர் கட்சி சில மாதங்களாக போலி முகநூல் பக்கத்தில் இருந்து எம்மை விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்கள்.  நாம் அண்ணன் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் எவரையும் விமர்சனம் செய்ய கூடாது என்ற கொள்கை முடிவோடு இருந்ததால் இவர்களின் விமர்சனத்திற்கு பதில் தராமல் விலகி சென்றோம். ஆனால் இவர்கள் ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திற்கு விசுவாசத்தை காட்ட எம்மையே அழிக்க முன்வந்ததால் இவர்களை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் வந்துவிட்டோம்” என்று எழுதினார்.
தீககுளிக்க சீமானை அழைத்த வீரலட்சுமி
தீககுளிக்க சீமானை அழைத்த வீரலட்சுமி

இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியானது.
பல்லாவரம் தொகுதியில் வீரலட்சுமிக்கு டெபாசிட் கிடைக்காவிட்டாலும், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டார். அதோடு  14083 வாக்குகளையும்  பெற்றுவிட்டார்.
இவரை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடலூரில் போட்டியிட்டு 12, 497 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.
“சீமானைவிட அதிக வாக்கு பெற்றவர் வீரலட்சுமிதான். அவர்தான் உண்மையன தமிழின தலைவி” என்கிற ரேஞ்சுக்கு எழுதி வருகிறார்கள் வீரலட்சுமி ஆதரவாளர்கள்.(!)
இதானால் ஏக கோபத்தில் இருக்கிறார்கள் சீமான் கட்சியினர்.