சென்னை:  தமிழக்ததில் இன்று  118 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்த நிலையில், இந்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பெண் டிரைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் தமிழகத்தின் 2வது பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற பெருமைக்கும், அரசு ஆம்புலன்சு வாகனமான 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கும்  உரிய வராகிறார்.
தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரம் கொரோனா நோயாளிகளின் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் இன்று 118 ஆம்புலன்கள் சேவையை தமிழகஅரசு தொடங்கி உள்ளது. இதில் ஓட்டுநராக இளம்பெண் வீர லட்சுமி என்பவரும்  பணியேற்று, ஆம்புலன்சை இயக்கி  வருகிறார்.
சமூக அக்கறை காரணமாகவே தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநகராக மாறி உள்ளேன் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், கயல்விழி என்ற இளம்பெண் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியேற்று  ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி சாதனை புரிந்தார்.

அதையடுத்து, தற்போது வீரலட்சுமி, ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கும் இரண்டாவது பெண் டிரைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே வேளையில், 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.