சந்தன வீரப்பன் கண்ணி வெடியில் தப்பிய அதிரடிப்படைபோலீஸ் கமிஷனர் மறைவு

--

மேட்டூர்:

மிழக – கர்நாடக மாநில  எல்லையில் காட்டுப்பகுதியில் ராஜாங்கம் நடத்தி வந்த வீரப்பனை படிக்கும் அதிரடிபடையில் முக்கிய பொறுப்பு வகித்த ஐ.பி.எஸ். அதிகாரி கோபால கிருஷ்ணன்.

மேட்டூர், கொளத்தூரை சேர்ந்த இவர், கடந்த 1993-ம் ஆண்டு  வீரப்பனை சுட்டுக் கொன்றே தீருவேன், அதன் பிறகுதான் திருமணம் செய்வேன் என்று சபதம் எடுத்தார்.

இது, வீரப்பனை ஆத்திரமடையச் செய்தது. இருவரில் யார் யாரை கொல்வது என்று திரைப்படம் போல விறுவிறுப்பான காட்சிகள் நிஜமாகவே அரங்கேறின.

காவல்துறை அதிகாரிகளை வேவு பார்த்து, அவர்கள் நடமாட்டம் குறித்து அறிய தன்னிடம் ஒரு உளவுப்படையே வைத்திருந்தார் வீரப்பன். அவர்களில் சிலர் காவல்துறையை அணுகி,  வீரப்பன் இருக்கும் இடம் தெரியும் என்று நம்ப வைத்தார்கள்.

கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்

வீரப்பன் ஆட்களின் வலையில் சிக்கியதை அறியாமல், 1993-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, கோபாலகிருஷ்ணன் ஐபிஎஸ் தலைமையில் தமிழக, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த 41 காவலர்கள்  மாதேஸ்வர மலை (எம்.எம். ஹில்) நோக்கி பாலாறை கடந்து சுரக்காமடுவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

சுரக்காமடுவு பகுதியில் 14 இடங்களில் கண்ணிவெடியை சந்தனக்கடத்தல் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் பதுக்கி வைத்திருந்தனர். முன்னால் இரண்டு போலீஸ் பஸ்கள் செல்ல, இரண்டு வண்டிகள் கடந்து ஜீப்பில் கோபாலகிருஷ்ணன் சென்றார்.

அப்போது, புதைத்துவைத்திருந்த வெடிகளை வீரப்பன் கூட்டாளிகள் வெடிக்கச் செய்தனர். பெரும் சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. 100 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பஸ், ஜீப் தூக்கி வீசப்பட்டது.

1993ம் ஆண்டு தாக்குதல்
1993ம் ஆண்டு தாக்குதல்

இந்த சம்பவத்தில்  20  காவல்துறையினர்,  இரண்டு வனத்துறை காவலர்கள் என 22 பேர் இறந்தனர். 5 தமிழக போலீஸ் அதிகாரிகள், 7 கர்நாடக போலீஸார் உள்பட மொத்தம் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இப்படி படுகாயம் அடைந்தவர்களுள் ஒருவர் கோபாலகிருஷ்ணன். வீரப்பன் வைத்த கண்ணிவெடியில் நூலிழையில் தப்பித்தவர் இவர். அதன் பிறகு வீரப்பன் 2004ம் ஆண்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.

காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ணன் தனது சொந்த ஊரான மேட்டூரில் வாழ்ந்துவந்தார். கடந்த சில காலமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர் நேற்று காலமானார்.