டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகிய ‘#வீதிக்குவாங்க_ரஜினி’ ஹேஷ்டேக்….!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் மற்றும் பொதுமக்கள் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தை மேற்கோள் காட்டி டிவிட்டரில் #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் நானே குரல் கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் எங்கே போய்ட்டாரு என்ற கேள்வியுடன் வீதிக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

” இஸ்லாமியர்களுக்குப் பிரச்சினை என்றால் முதல் குரல் எனது குரல் என்று சொன்ன ரஜினி இப்போதாவது வீதிக்கு வாருங்கள்” என்று அழைக்கும் விதமாக இந்த பதிவுகள் அமைந்துள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-