Random image

ஒரே கார்டில் லைசன்ஸ் உள்பட வாகன விவரங்கள்: போக்குவரத்து துறை புதிய திட்டம்

சென்னை:

வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்துக்கான ஆர்.சி.புக் விவர;ம, வரி, இன்சூரன்ஸ் போன்றவை அடங்கிய ஒரே ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் முதல் சோதனை முறையில் நடைமுறைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் சோதனை செய்யும்போது, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆவனங்கள் சம்ர்ப்பிக்கப்பட வேண்டியது உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு ஒரே ஸ்மார்ட் கார்டில் தமிழகத்தில்  லைசன்ஸ், ஆர்.சி.புக்.,வரி, காப்பீடு ஆகிய விவரங்கள் ஒருங்கிணைத்து வழங்க வட்டார போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

இதற்காக சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் காடுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஒரு ஸ்மார்ட் கார்டிலேயே ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், காப்பீடு தகவல்கள். இதற்கு முன்பு வாகனத்தின் உரிமையாளர் யார்?, ஏற்கனவே போக்குவரத்து விதிமீறல் நடந்துள்ளதா மற்றும் தற்போதைய வாகன உரிமையாளரின் தகவல்கள் கிடைக்கும்.

இதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்க இருக்கிறது.

போக்குவரத்து காவல்துறையினருக்கு ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டை அதில் ஸ்கேன் செய்தாலே, வாகன ஓட்டி மற்றும் வாகனம் குறித்து அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இதற்கிடையே முதற்கட்டமாக 144 ஆர்டிஓ அலுவலகங்களில் அதே பதிவு மற்றும் உரிமத்திற்கான கட்டணத்தில் நவம்பர் முதல் இந்த ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது