சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் செலுத்தும் முறையில் விரைவில் மாற்றம்!

டில்லி,

சுங்கச்சாவடியில் பணம் கட்டுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

ஒருவர் எந்த அளவுக்கு சாலையை பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற வகையில், புதிய நடைமுறையை கொண்டு வர இருப்பதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணம் கட்டும்போது, தொலை தூரம் சாலை உபயோகப்படுத்தவர்களுக்கும், அருகே உள்ள பகுதிக்கு செல்பவர்களுக்கும் ஒரே வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை தடுக்கும் பொருட்டே, ஒருவர் எந்த அளவுக்கு சாலையை உபயோகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு பணம் கட்ட வேண்டிய வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை, சோதனை அடிப்படையில்,  டில்லி வழியாக ஹரியானாவில் இருந்து உ.பி., செல்லும் கிழக்கு புறவட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.