கொரோனா தடையால் சொந்த ஊர்களுக்கு செல்ல…… எல்லையை தாண்ட அணிவகுத்து நிற்கும் வாகனம்……

மலேசியா :

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளன, அதே வேலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வெளியூரில் இருந்து வந்த மாணவர்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

தரைவழியே மற்ற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு யாரும் வராமல் தடுக்க எல்லைகளை மூடிய நாடுகளில், குறிப்பிடத்தக்கது ரஷ்யா, சீன உடன் 4000 கி.மீ. நீளத்திற்கு தனது எல்லையை பகிரும் ரஷ்யா கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே சீனாவுடனான தனது எல்லையை மூடியது.

இந்நிலையில், மலேசிய அரசாங்கம் சிங்கப்பூர் உடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டிருக்கிறது, இந்த உத்தரவு புதன் கிழமை முதல் அமலுக்கு வரஇருப்பதால்.

சிங்கப்பூர் மலேசியா எல்லையில் ஜோஹோர் பாரு என்ற இடத்தில் ஏராளமான வாகனங்கள் இருபுறமும் எல்லையை கடக்க காத்திருக்கின்றன.

எல்லையில் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்ளாவதால் இங்கு மக்கள் நீண்ட தூரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.