மணல் திருடும் வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக்கூடாது : உயர்நீதிமன்றம்

துரை

ணல் திருட உபயோக்கிக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை இட்டுள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.   இதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்த  போதிலும் இது தொடர்ந்து வருகிறது.   மணல் திருடும் போது பிடிபடும் வாகனங்களை அரசு பறிமுதல் செய்கிறது.   வழக்கு முடிந்த பின் அந்த வாகனங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பி தரப்படுகிறது.

மணல் திருட்டு குறித்த  பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.   இந்த வழக்கின் விசாரணை நேர்று நடந்தது.    அப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு புதிய ஆணை ஒன்றை  பிறப்பித்துள்ளது.

அந்த ஆணையில், “மணல் திருட்டுக்கு உபயோகப்படுத்தப் பட்ட வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக் கூடாது.   அது மாட்டு வண்டியாக இருந்தாலும் சரி, மாடுகளை மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.   வண்டியை திருப்பி தரக்கூடாது.” என உள்துறை செயலாளருக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.