Random image

மு.க.அழகிரியை வரவேற்ற வேளச்சேரி ரவி கட்சியில் இருந்து நீக்கம்: திமுக தலைமை அதிரடி

சென்னை:

திமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள மு.க.அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

நேற்று சென்னை   வந்த மு.க.அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற சேளச்சேரியை சேர்ந்த  திமுக நிர்வாகி ரவி அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமு தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பிறகு, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், ஸ்டாலின் தலைமையை தான் ஏற்றுக்கொள்வ தாகவும் கூறி வருகிறார். ஆனால், அவரை கட்சியில் மீண்டும் சேர்க்க திமுக தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது பலத்தை கட்சிக்கு நிரூபிக்கும் வகையில்  5ந்தேதி (நாளை) சென்னையில் பிரமாண்ட பேரணி நடைபெறும், அதில் சுமார் 1 லட்சம் திமுக தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று மு.க.அழகிரி சென்னை வந்தார். அப்போது, அவரை வேளச்சேரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி ரவி உள்பட ஏராளமானோர் வரவேற்றனர். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, வேளச்சேரி ரவி,  கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செய லாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாகவாக அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட  வேளச்சேரி ரவி, வேளச்சேரி கிழக்குப் பகுதி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.