சென்னை:

ரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை மடக்கி, ஆவனங்களை இல்லை என கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களுடன், அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இன்று காலை சென்னை வேளச்சேரி நூறடி சாலையில்  உதவி ஆய்வாளர் உள்பட 4 போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக வந்த   இருசக்கர வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.  அப்போது பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் தேவையான ஆவனங்களை கேட்டு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான ரசீதுகள் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒருசில வாகன ஓட்டிகள் ரசீது கேட்டதால், காவலர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, வாகன ஓட்டி ஒருவரை போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே தகராறு மூண்டு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேளச்சேரி காவல்துறை, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ…