சென்னை:

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு  திருவிழாவையொட்டி வரும் 25ம் தேதி முதல் 200 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய வருடாந்திர ஆண்டுப் பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள  வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி யில் குவிவார்கள்.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. வரும் 25ந்தேதி முதல்  செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 15 நாட்கள சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்து உள்ளது.

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா காரணமாக பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பேராலயம், பேருந்துநிலையம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாவையொட்டி நாகை மாவட்டம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.