சமுத்திரகனியின் ‘வெள்ளை யானை’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு….!

சமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.

இதில் ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எ.எல்.ரமேஷ் படத் தொகுப்பு செய்கிறார்.

யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.