Casting : Vivek, Charle, Pooja Devariya, Dev, Paige Henderson

Directed By : Vivek Elangovan

Music By : Ramgopal Krishnaraju

Produced By : Dhigha Sekaran, Varun Kumar, Ajay Sampath

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார்.

திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறான். இந்தக் கடத்தலுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதற்கு முன் விவேக் மகன் தேவ் கடத்தப்படுகிறார்.

போலீஸ் மூளையை வைத்து தனக்குள் கேள்வி கேட்டு விடைகளைத் தேடிப் புறப்படும்போதும் விவேக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுகொள்ள முடிகிறது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொலை மட்டுமே படத்தின் மையம்..

குற்றம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று செல்லும் புலனாய்வுப் பாணி சுவாரஸ்யம் சேர்க்கிறது.விவேக்கின் நண்பராக நடித்திருக்கும் சார்லி, சில இடங்களில் சின்ன சின்ன நகைச்சுவை மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்க ‘வெள்ளைப்பூக்கள்’ சுதந்திரமாய் பூக்கட்டும் என்று சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.