வேலூர்: தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

வேலூர்:

ராணிப்பேட்டை சிப்காட் தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் சிப்காட் உள்ளது. இங்குள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம் போல் தொழிலாளர்கள் இன்று பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேர் எந்திரத்தில் சிக்கினர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தி மீட்க முயன்றனர். ஆனால், எந்திரத்தில் சிக்கிய ஜெய்சங்கர், ராஜேந்திரன், அருண் ஆகிய 3 தொழிலாளர்களும் உயிரிழந்துவிட்டனர்.
3 பேரும் சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.