மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழி அடைக்கப்பட்டதால், இறந்தவரின் உடல் பாலத்தில் இருந்து கயிறுகட்டி இறக்கப்பட்ட அவலம்! (வீடியோ)

வேலூர்:

றந்த நபரின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச்செல்ல வழியில்லாததால், பாலத்தின்மீது இருந்து கயிறுகட்டி இறந்தவரின் உடலை இறக்கி எடுத்துச்சென்ற அவலம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

வேலூர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இறந்த நிலையில் அவருக்கு இறுதி சடங்குகள் செய்து, அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள இடங்கள் மற்றொரு வகுப்பினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் தனது நிலத்தைச் சுற்றி வேலி போட்டுவிட்டதால், மயானத்தை எடுத்துச் செல்ல வழியில்லாமல் தடுமாறினர்.

இந்த நிலையில் இறந்தவரின் உடலை சுமந்து வந்த உறவினர்கள், ஒரு பாலத்தின் மேலிருந்து பாடையில் கயிறு கட்டி கீழே இறங்கியுள்ளனர். மேலும் கீழே நின்றுகொண்டிருந்த நபர்கள் சிலர் பாடையை பிடித்து பின்னர் சுமந்து செல்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.