ஆன்லைன் விளையாட்டுக்கள் விளயாட ஆண்களுக்கு தடை : வேலூர் கல்வி நிலையம் உத்தரவு

வேலூர்

வேலூர் தொழில்நுட்ப கல்வி மையத்தில் ஆன்லைன் விளையாட்டு விளையாட ஆண்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்கள் வயது வரம்பின்றி பலரையும் கவர்ந்து வருகிறது. முன்பு கணினி மூலம் தனியாக விளையாடிய பலரும் தற்போது இணையத்தின் மூலம் முன்பின் தெரியாத பலருடன் இந்த  விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். இதில் பல விளையாட்டுக்கள் இடம் பெற்ற போதிலும் தற்போதைய நிலவரப்படி ஆண்களிடையே ”பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுன்ட்ஸ்” என்னும் விளையாட்டும் பெண்களிடையே ”சிக்கன் டின்னர்ஸ்” என்னும் விளையாட்டும் பிரபலமாக உள்ளன.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் தொழிற்கல்வி நிறுவனம் வேலூரிலமைந்துள்ளது. இங்கு கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. ஏற்கனவே கடந்த 2013 அம் வருடம் இந்த கல்வி நிறுவனம் விதிமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரு மாணவையையும் ஒரு ஊழியரையும் வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த கல்வி நிறுவனம் விடுதியில் உள்ள மாணர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட மாணவர்களுக்கு அதாவது ஆண்களுக்கு தடை விதித்துள்ளது. குறிப்பாக “பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட்ஸ் போன்ற எந்த ஒரு ஆனலைன் விளையாட்டுக்களை விளையாடக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெண்களுக்கு கிடையாது என்பதால் அவர்கள் விடுதியில் ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த உத்தரவு ஈ மெயில் மூலம் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மெயிலில் மாணவர்கள் உடல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்கள் மூலம் உடலையும் மனதையும் வளப்படுத்திக் கொண்டு எதிர்கால வளர்ச்சிக்கு வழி செய்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.