வேலூர்:

ணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் உடன் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள்  போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 11ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறை வடைந்தது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.

இதுவரை தேர்தலில் போட்டியிட  அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர் களுடன் சுமார் 50 பேர் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிட வில்லை என்று அறிவித்து உள்ளது.  இதுகுறித்து மநீம வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களின் நம்பிக்கையினை காப்பது என்பது மிக முக்கியம் எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்த விருக்கிறது. எதிர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டி யிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு   மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்