வேலூர் மக்களவைத் தேர்தல்: ஏசிஎஸ், கதிர்ஆனந்த் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசிசண்முகம், திமுக வேட்பாளர்  கதிர்ஆனந்த்  ஆகியோரின் வேட்பு மனுக்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 11ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 18ந்தேதி மாலை 3 மணியுடன் நிறை வடைந்தது. இங்கு முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர் களுடன் சுமார் 50 பேர் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனு செய்துள்ள ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறை தேர்தல் அறிவிப்பின்போது, கதிர்ஆனந்த் வீட்டில், ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.