வேலூர் மக்களவை தேர்தல்: அதிகாலையிலேயே வாக்கிங் சென்று பிரசாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்தை ஆதரித்து இன்று அதிகாலையிலேயே  திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இன்று முதல் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டி ருந்தது.

அதன்படி, இன்று அதிகாலையிலேயே தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  காலையில் வேட்பாளர் கதிர்ஆனந்துடன் நடைபயணம் சென்ற  ஸ்டாலின்,  அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

காலையில் அவர் நடை பயிற்சி மேற்கொண்டு தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க வந்த ஸ்டாலினுடன் வியாபாரிகளும், பொதுமக்களும் செல்பி எடுத்து மகிழந்தனர்.

தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் அனைத்து கடைகளிலும் உள்ள வியாபாரிகளுடன் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்குகள் சேகரிக்கிறார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: election campaign, MK Stalin Starts Walking Campaign, Vellore Lok Sabha Election
-=-