வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவு நடைபெற்றுள்ளது.

காலை 9 மணி அளவில் மொத்தம் 7.40 சதவீத வாக்குகள் பதிவான நிலையில்,  11 மணி அளவில் 14.61 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. தற்போது வாக்குப்பதிவு சற்றே சூடுபிடித்து மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவு ஆகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

வேலூர் –  24.73 சதவிகிதம்

அணைக்கட்டு-  27.14 சதவிகிதம்

கே.வி.குப்பம் – 30.75 சதவிகிதம்

குடியாத்தம் – 32.43 சதவிகிதம்

ஆம்பூர் – 31.48  சதவிகிதம்

வாணியம்பாடி – 30.21  சதவிகிதம்

தற்போதை சூழ்நிலையில்  அங்கு வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்து வருவதாக தெரிகிறது. கடந்த 11 மணி அளவிலான வாக்குப்பதிவை விட அடுத்த 2 மணி நேரதில் சுமார் 14 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.