பெரியார் நினைவிடத்தில் கதிர் ஆனந்த் அஞ்சலி

--

சென்னை

வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் இன்று பெரியார்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியில் ஏராளமான பணப்புழக்கம் நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதிக்கான தேர்தல் கடந்த 5 ஆம் தேதி அன்று நடந்தது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே இரு கட்சிகளும் இழுபறியில் இருந்தன. இறுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் சுமார் 8000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் ஆவார்.

 

இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோருடன் சென்னையில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடன் திமுக மற்றும் திஅ நிர்வாகிகளும் உடன் சென்றுள்ளனர்.    அவருக்கு தி க தலைவர் கே விரமணி இனிப்பு ஊட்டினார்.