ராணிப்பேட்டை:  வேலூர் அருகே மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளர் வீட்டில்,  லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில்,  கணக்கில் வராத 3.25 கோடி ரூபாய் பணம்கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர், காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பணி புரிந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர்  மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக இருந்து வருகிறது. இவரது கண்ட்ரோலில், திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், விழுப்புரம், வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்கள்  உள்ளன. இந்த மாவட்டங்களில் அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்பட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அவருக்கு உள்ளது.

இதன்மூலம் முறைகேடாக பல தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும்,  இதற்கு அன்பளிப்பாக லட்சக்கணக்கில் கையூட்டு பெறுவதாகவும் புகார்கள் குவிநத்ன. இதையடுத்து பன்னீர்செல்வத்துக்கு சொந்த ராணிப்பேட்டை  வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

வேலூர் லஞ்ச ஒழிப்புதுறை காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்,  அவரை பின்தொடர்ந்து சென்று முதலில் அந்த வாடகை வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் காரை சோதனை செய்துள்ளனர். அதில், ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது அலுவலகம் போல் செயல்படும் வாடகை வீட்டிலும் சோதனை நடத்தியதில் ரூ. 31. 23 லட்சம் என மொத்தம் ரூ. 33.73 லட்சம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவருக்கு சொந்தமானராணிப்பேட்டை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த  கட்டுக் கட்டான பண்த்தைக் கண்டு மலைத்த போலீசார், அதை கைப்ப்ற்றினார். அதை எண்ணியபோது,  3.25 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. . மேலும் 3.6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, பல்வேறு நில ஆவணங்கள், பத்திரங்கள், சொகுசு கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை வீட்டை பன்னீர் செல்வம் லஞ்சம் வாங்குவதற்காகவே உபயோகப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.