மிஷ்கினுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது வேல்ஸ் நிறுவனம்…!

விஷால் தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் விடுத்தது மிஷ்கினுக்கு விஷாலுக்கும் இடையில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது .

இந்நிலையில் நேற்று (மார்ச் 12) நடைபெற்ற ‘கண்ணாமூச்சி’ வெப் சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில்கலந்து கொண்ட மிஷ்கின் விஷாலை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், “மிஷ்கின் சார், உங்கள் மீதும் உங்களுடைய கதையின் மீதும் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. நீங்கள் தயார் என்றால் வேல்ஸ் நிறுவனமும் தயார்” என்று தெரிவித்துள்ளது. இந்தப் பதிவுடன் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஐசரி கணேஷ் நடத்தி வருகிறார். இவர் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராகக் களமிறங்கி பணிபுரிந்து வருகிறார்.

நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக விஷால் – கார்த்தி நடிக்க ஐசரி கணேஷ் தயாரிப்பில் தொடங்கிய படம் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’. தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கலால் அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.