சென்னை:

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த வும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் தற்காலிக பணியாளர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதுபோல, வேலூரில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளப்பட்ட பணியாளர்களில் 50 பேர் தங்களது பணியை சரிவர செய்யவில்லை என்று கூறி அதிரடியாக நீக்கி உள்ளார் மாவட்ட ஆட்சியர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை நிர் தேங்குவதால் கொசு பரவி வருகிறது. பல இடங்களில் டெங்கு கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும நோக்கில்,  தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் டெங்கு கொசு அழிப்பு மற்றும் டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதுபோல, வேலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக  910 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் வீடு, வீடாக சென்று சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அதிகாரிகள் திடீரென சென்று,  டெங்கு ஒழிப்பு குறித்து பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பல பணியாளர்கள் பணிகளை சரிவர செய்யாமல் இருப்பது தெரிய வந்த நிலையில், அவர்களை கணக்கிட்டு சுமார்  50 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.