வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ரிலீஸ் டேட் அறிவிப்பு…!

வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் குமார் நடராஜன் இயக்கியுள்ளார். மேக்கர்ஸ் ஸ்டூடியோ சார்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட த்ரில்லர் படங்களின் வரிசையில் இந்த படத்தின் கதையும் அமைந்துள்ளது.

ரமேஷ் திலக் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் அச்சு ராஜாமணி.

வெகு நாட்களாக கிடப்பில் இருந்த இந்த படம் தற்போது வெளியாகவுள்ளது. படம் மார்ச் மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 2018ம் ஆண்டில் விஜய் சேதுபதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.