வெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… கட்டிடங்கள் சேதம்…

வெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டில் இன்று காலை  திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

பல இடங்களில் வீடுகள். கட்டிடங்கள்  இடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களைவிட்டு சாலையில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் இதுவரையில் வெளியில் வரவில்லை. ஆனால், சேதம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

You may have missed