டில்லி

ன்மோகன் சிங் பாகிஸ்தான் உடன் சேர்ந்து சதி செய்வதாக மோடி பேசியதற்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.   அப்போது அவர் பாஜக வை தோற்கடிக்க மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் பாகிஸ்தானுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக குற்றாம் சாட்டினார்.   மோடியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.    காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

தற்போது நடைபெறும் பாராளுமன்ற குளிர்காலத்தொடரில் இதே கோரிக்கையை முன் வைத்து காங்கிரஸ் போராடி வருகிறது.   மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இப்பிரச்னைக்காக சபைத் தலவர் இருக்கையின் முன் போராட்டம் நடத்தினர்.   சபைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது கோபம் அடைந்தார்.

அவர், “பிரதமரின் பேச்சுக்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.   காங்கிரஸ் இது போல போராடுவது மிகவும் கண்டனத்துக்குறியது.    மோடி இது போல இந்த அவையில் பேசவில்லை.  அந்த சம்பவம் மாநிலங்கள் அவையில் நடை பெறவில்லை.   எனவே இங்கு இது குறித்து போராடக்கூடாது” எனக் கண்டிப்புடன் தெரிவித்தார்.   அவைக் கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.