பாலுவின் குரல் அமைதி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை : வெங்கையா நாயுடு

டில்லி

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்குக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று மதியம் உயிர் இழந்தார்.  அவரது மறைவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.   அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது இரங்கல் செய்தியில், “பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மறைவு எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. எனது துயரத்தைச் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்.   உலக மக்கள் அனைவரையும் போல நானும் எனது மனைவி உஷாம்மாவும் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்தோம்.  அவர் கொரோனாவை வென்று வருவார் என எதிர்பார்த்த வேளையில் விதியின் கொடூர கரங்கள் சிரித்த முகம் கொண்ட பாலுவை நம்மிடம் இருந்து பிடுக்ங்கிக் கொண்டன.

நான் தினமும் காலை வேளையில் கண்டசாலா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய அன்னமாச்சாரியா கீர்த்தனை மற்றும் பக்திப்பாடல்களை கேட்டு புத்துணர்வு பெறுவேன்  இது பல வருடங்களாக எனது பழக்கமாகும்.  இப்போது பாலு நம்மிடையே இல்லை என்பது எனக்குத் துயரத்தை அளித்துள்ளது.  உங்கள் தெய்வீக குரலைக் கேட்காமல் எனது காலைப் பொழுது எப்படித் தொடங்கும் பாலு?

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நான் அடிக்கடி முடஒலில் பாலுவுடனும் பிறகு அவர் குடும்பத்தினருடனும் பேசி வந்தேன். அவ்ர் உடல்நிலை குறித்து விசாரிப்பது எனது தினசரி பழக்கம் ஆனது.   நான் அடிக்கடி எம் ஜி எம் மருத்துவமனை மருத்துவர்களிடமும் இது குறித்து விசாரித்து வந்தேன். அவர்கள் பாலு இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகத் தெரிவிக்கவே நான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

அவர் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருவதாக முதலில் சொன்ன போது நான் மகிழ்ச்சி அடைந்தேன்  அப்போது அவர்கள் பல மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து அவருக்குச் சிகிச்சை அளிப்பது குறித்து நிம்மதி டைந்தேன  நான் தென் இந்தியாவில் உள்ள பல புகழெர்ர மருத்துவ நிபுணர்களிடம் இது குறித்து பேசினேன்.  பாலுவுக்கு பிசியோ தெரபி சிகிச்சைக்கு தேவைப்பட இயந்திரத்தை நான் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் பேசி ஏற்பாடு செய்தேன்.

பாலுவின் மகன் சரண் என்னுடன் அடிக்கடி உரையாடி அவருடைய உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவித்து வந்தார்.  நான்கு நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் அவருடைய உடல்நிலை முன்னேறி வருவதாகத் தெரிவித்ததால் சற்று நிம்மதி அடைந்தேன்.  அவர் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.   மேலும் அவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிவியில் கிரிக்கெட் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததை அறிந்த நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த அனைத்து செய்திகள் மூலம் அவர் விரைவில் குணமடைவார் என நான் நம்பி இருந்த போது அவருடைய மரணச் செய்தியால் நான் உடைந்து போனேன்.  நான் என்னுடன் அவர் பழகிய நாட்களை நினைக்கத் தொடங்கினேன்.   இந்த திடீர் துக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாலுவின் மீது நான் கொண்ட சிறப்பு அன்பு எப்போதும் மாறாது.  அவரை நான் சிறு வயதிலிருந்தே அறிவேன். இருவரும் நெல்லூரில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்.  அவருடைய தந்தையாரிடம் இருந்து இசையைப் பயின்றார்.  அவர் தந்தையார் சாம்பமூர்த்தி ஒரு காலட்சேப வித்வான் மற்றும் பெரிய சங்கீத விற்பன்னர் ஆவார்   அவர் நெல்லூரில் தியாகராஜ உற்சவம் ஏறபாடு செய்து அதில் டி கே பட்டம்மாள், எம் எஸ் சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாதன் ஐயர், உள்ளிட்ட பலரையும் பாட வைத்துள்ளர்.

அவர் எனது சிறுவயது தோழர் என்பதால் அவருடைய இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.  நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நீண்ட நேரம் உரையாடி மகிழ்வோம்.   அவர் தெலுங்கு மொழி மீதும் இந்திய கலாச்சாரத்தின் மீதும் கொண்டிருந்த காதல் எங்கள் இருவரையும் மேலும் ஒன்றிணைத்தது.  அவர் ஒரு கல்விச்சாலைக்கு ஒப்பானவர். தற்போதைய மற்றும் முந்தைய தலைமுறையினருக்கு இடையே ஒரு பாலமாக விளங்கினார்.

அவருடைய திறமை மற்றும் கற்கும் பண்பு இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். அவர் ஒரு உலகறிந்த பாடகராக மட்டுமின்றி பல வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். அது மட்டுமின்றி 60களில் இருந்து தற்போது வரையிலான பல புகழ் பெற்ற நடிகர்களுக்குப் பின்னணி பாடி உள்ளார். அவர் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பாடி உள்ளார்.

பாலு வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   உடன் பாடும் அனைவருடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.  என்னால் நான் அவருக்கு 2016 ஆம் வருடம் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் நூற்றாண்டு விருது அளித்ததை மறக்க முடியாது.

என்னால் மற்றும் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களால் பாலுவின் குரல் அமைதி அடைந்து விட்டது என்பதை நம்ப முடியாது.  ஓம் சாந்தி” எனப் பதிந்துள்ளார்.