Random image

செர்பியா : நேருவை நினைவு கூர்ந்த வெங்கையா நாயுடு

பெல்கிரேட்

செர்பிய நாட்டு குடியரசு தினத்தன்று இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஜவகர்லால் நேருவை நினைவு கூர்ந்து உரையாற்றியுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.    கடந்த சனிக்கிழமை அன்று செர்பிய நாட்டின் குடியரசு தினம் நடைபெற்றது.   அப்போது நடந்த அணிவகுப்பை வெங்கையா நாயுடு பார்வை இட்டார்.  அத்துடன் செர்பிய நாட்டின் பாராளுமன்றத்ஹ்டில் அவர் சிறப்புரை ஆற்றினார்.

வெங்கையா நாயுடு தனது உரையில், “கடந்த 1961 ஆம் வருடம் செர்பியாவில் அணிசேர நாடுகளின் முதல் கூட்டம் நடைபெற்றது.   அந்த வருடம் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி நடந்த அந்த கூட்டத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  வெகு நாட்களாக இந்தியாவுக்கு செர்பியாவுக்கும் இடையில் நல்லுறவு உள்ளது.

கடந்த 1961 ஆம் வருடம் நேரு சுதந்திர நாட்டின் தனித்துவம் குறித்து கூறிய கருத்துக்கள் இன்றும் கடைபிடிக்க வேண்டியவைகளாக உள்ளது.   செர்பியாவின் தலைவரான மார்ஷல் டிம் என்பது இந்தியரகளுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் ஆகும்.    அவர் கடந்த 1954 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் உரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.” என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் நேருவை தொடர்ந்து குறை கூறி வருகையில் இந்திய துணை ஜனாதிபதியும் மூத்த பாஜக தலைவருமன வெங்கையா நாயுடு நேரு குறித்து புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.