வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கிய வெனிஸ் நகரம் ! அவசர கால நிலை அறிவிப்பு

வெனிஸ்: இத்தாலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெனிஸ் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நாட்டின் முக்கிய நகரமான வெனிசில் வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கிறது.
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்.


கிட்டத்தட்ட 187 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. 1966ம் ஆண்டுக்கு (194 செ.மீ) பிறகு இப்போது தான் இது போன்ற பேய் மழை பெய்துள்ளது.
கனமழையால், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம் என பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


தொடர் வெள்ளத்தால் வெனிஸ் நகர மேயர் புருக்நாரோ அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார். அரசின் உதவிக்காக காத்திருக்கிறோம். சேதம் அதிகமாக ஏற்படடுள்ளது. பருவகாலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.