பொன்.ராதாவை உதாசீனப்படுத்திய வெங்கையா நாயுடு

தமழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு  உதாசீனப்டுத்திய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வெங்கையாவை வாழ்த்தும் பொருட்டு, பொன்னாடை போர்த்த முயல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். அவரை சற்று பொறுத்திருக்கும்படி ஜாடை காட்டிய வெங்கையா,  அடுத்தவரிடம் பொக்கே வாங்கிக்கொள்கிறார்.

காத்திருந்து பொன்னாடை போர்த்திய பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடுவின் நெஞ்சு வரை குனிந்து கையெடுத்து கும்பிட்டு கண்மூடி வணங்குகிறார்.

பிறகு, கீழே வைத்திருந்த பொக்கேவை எடுத்து வெங்கையாவிடம் அளிக்கிறார். அதை அலட்சியத் தோரணையுடன் வாங்கிக்கொள்ளும் வெங்கையா நாயுடு, “போ.. போ… போ” என்பது போல அலட்சியமாக இடது கையால் விரட்டுகிறார் பொன்.ராதாகிருஷ்ணனை.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரை துணை ஜனாதிபதி அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.