ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கும்படி வெங்கையா பரிந்துரை?

டில்லி:

ராகுல் மீது உரிமை மீறல் காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் – ஜெட்லி – வெங்கையா

காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை, ஜெட் லை – Jaitlie (பொய்யர்)   என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

இது உரிமை மீறல் என  பா.ஜ., எம்.பி., பூபேந்திர யாதவ் பாராளுமன்ற மேலவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.