வெங்கட்பிரபு படத்தில் ராகவா லாரன்ஸ்…?

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சென்னை 28’ அதன்பிறகு ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கினார்.

இதைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிம்புவின் சர்ச்சையால் அடுத்த வருடம் (2020) ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ‘நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும். விரைவில் அப்டேட்’ எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, ராகவா லாரன்ஸை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்டது.