ஓடிடி தளத்தில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் ‘லாக் அப்’ வெளியிடும் தேதி அறிவிப்பு….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.

திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது லாக்கப்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ZEE5 ஓடிடி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் நடிப்பில் அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இப்படத்தில் வைபவ் வாணி போஜன் ஆகியோரும் நடிக்கின்றனர்.