திருப்பதி கோவிலில் வெங்கையா – எடப்பாடி சாமி தரிசனம்

திருமலை:

திருப்பதி வெங்கடேஷ பெருமாள் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இரு வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

திருமலையில் வெங்கையா நாயுடு, எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து திருப்பதி சென்றிருந்தார்.  நேற்று  இரவு 7.30 மணியளவில்  தனது  திருமலையில் உள்ள வராகசாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குடும்பத்தினருடன்  சாமி தரிசனம் செய்தார்.

அதேவேளையில், நேற்று இரவு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும்  சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார். அவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியிருந்த பத்மாவதி விருந்தினர் மாளிகையிலேயே தங்கினார். இதையறிந்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர்.

திருப்பதியில் துணைஜனாதிபதியை சந்தித்த தமிழக முதல்வர்

அதைத்தொடர்ந்து  இன்று  அதிகாலை 5.30 மணியளவில் வெங்கடேஷ பெருமாள்  கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி கவுரவித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி,  ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதுபேலவே  துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவும் இன்று அதிகாலை  சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழக முதல்வர் தம்மை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும், ஆந்திர எம்எல்ஏக்கள் மாவோயிஸ்களால் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இங்கு ஏதும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

ஒரே நேரத்தில் துணைஜனாதிபதி மற்றும் தமிழக முதல்வர் திருமலைக்கு வந்ததையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.