பொது சிவில் சட்டத்தை அரசியலாக்காதீர்கள்! வெங்கையாநாயுடு

டில்லி,

பொது சிவில் சட்டத்தை அரசியலாக்காதீர்கள் என இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமிய சட்டத்தில் உள்ள ‘தலாக்’ பெண்களுக்கு எதிரானது.  பொது சிவில் சட்டம் விவகாரத்தில் பிரதமர் மோடியை இழுப்பது ஏன்? என்றும், அதை அரசியலாக்காதீர்கள்  என்று வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

venkai

காங்கிரஸ் பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டு உள்ளது.

பாரதீய ஜனதா இது முற்போக்கானது என்று குறிப்பிட்டு உள்ளது.

இதுதொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை இழுப்பதற்கு காரணம் என்ன என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பிஉள்ளார்.

பெண்களுக்கு எதிரான மதரீதியிலான பேதங்களை முடிவுக்கு கொண்டுவரும் பணியில் மத்திய அரசு தன்னை ஈடுபடுத்தி உள்ளது.

பொது சிவில் சட்டம் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கி உள்ளார்.

சட்ட ஆணையத்தை புறக்கணிக்க நீங்கள் முடிவு செய்து உள்ளது உங்களுடைய விருப்பம், ஆனால் உங்களுடைய கருத்தை மற்றவர் மீது திணிக்காதீர்கள்; இவ்விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்,” என்று வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.

“இவ்விவகாத்தை முன்னெடுத்து செல்வதற்கு இது என்ன இடையூறு… என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை… தெளிவான முடிவு வரட்டும்,” என்று கூறிஉள்ளார்.

மும்முறை தலாக் விவகாரம் தேசிய அளவில் விவாதப்பொருள் ஆகிஉள்ளது என்று கூறி உள்ள வெங்கையா நாயுடு, சில நபர்கள் மும்முறை தலாக் விவகாரத்தை பொது சிவில் சட்டத்துடன் ஒப்பீடுகிறார்கள்.

vednki-law

இரு பிரச்சனையும் வெவ்வேறு. இன்று உண்மையான பிரச்சனை என்னவென்றால் பாலின நீதியாகும், பெண்களுக்கு பேதம் காட்டக்கூடாது, மரியாதை காக்கப்படவேண்டும் இவ்விவகாரத்தில் அரசியல் இருக்க கூடாது என்று கூறி உள்ளார்.

பொது சிவில் சட்டமானது எந்தஒரு மதத்தையும் சார்ந்தது கிடையாது என்பதையும் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்த  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்துக்கு  வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்து உள்ளார். , “நீங்கள் இப்பிரச்சனையில் பிரதமர் மோடியின் பெயரை இழுப்பது ஏன்? அவரை சர்வாதிகாரி என்று அழைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிஉள்ளார்.

இவ்விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் என்று வாரியத்திடம் வலியுறுத்தி உள்ள வெங்கையா நாயுடு அனைவரது சமத்துவத்தையும் உறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.

பொது சிவில் சட்டம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நேற்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை  அடுத்து, பொது சிவில் சட்டம் விவாத பொருளாகி உள்ளது.

ஏற்கனவே ‘தலாக்’ முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள், உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, பொது சிவில் சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.