வெண்ணிலா கபடிகுழு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியானது.

சுசீந்திரன் இயக்கத்தில் கபடி விளையாட்டை பிரதான படுத்தி வெளிவந்த படம் வெண்ணிலா கபடிகுழு. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி என அனைவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து செல்வசேகரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷாலுக்கு பதிலாக விக்ராந்த் நடிக்க கதாநாயகியாக அர்த்தனா பினு நடிக்கிறார். மேலும் பரோட்டா சூரி, கிஷோர், அப்புக் குட்டி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.