வீனஸ் வில்லியம்ஸ் வின் பண்ணுவாரா? இன்று தெரியும்

--

ண்டன்

விம்பிள்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று மாலை இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் – முகுருசா இருவரும் களம் இறங்குகின்றனர்

லண்டனில் விம்பிள்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு தொடங்குகிறது.   போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் உடன் முகுருசா மோதுகிறார்,

வீனஸ் வில்லியம்ஸ் ஏற்கனவே பெற்றுள்ள சாம்பியன் பட்டத்தை ஆறாம் முறையாக தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் களம் இறங்குகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோற்ற முகுருசா,  இந்த தடவை நிச்சயம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எண்ணத்துடன் மோதுகிறார்.

வீனஸ் இதுவரை முகுருசாவுடன் போட்டியிட்ட 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளார்.   இன்று அவர் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவாரா என்னும் தவிப்பில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர்