புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் ‘பிப்ரவரி 12 சுற்றறிக்கை’ மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு, வராக்கடன் விவகாரத்தை கையாளும் மத்திய அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வராக்கடன் பிரச்சினையைக் கையாள்வது குறித்து, பொதுத்துறை வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கும் மத்திய அரசின் அதிகாரம், உச்சநீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்படாது.

ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 12ம் தேதி சுற்றறிக்கை இல்லாத சூழலில், S4A திட்டம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 12 சுற்றறிக்கையானது, கடன்வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து, கடன் வழங்கிய வங்கிகள் முடிவெடுக்க, நிர்வாக அனுமதி பெற்ற ஒரு கொள்கையை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது. இந்த சுற்றறிக்கையை ‘செல்லாது’ என தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடன் வாங்கியவர், தனது தவணையை செலுத்த ஒரு நாள் தாமதமானாலும், கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறது இந்த சுற்றறிக்கை. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைகளிலேயே இதுதான் மிகவும் கடுமையானது என்று தெரிவிக்கின்றனர் சில வங்கி ஊழியர்கள்.

– மதுரை மாயாண்டி