பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு

டில்லி:

பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என் ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில சாமியார் ஆசாராம் பாபு ( வயது 75) குஜராத் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமினில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆசாராம் பாபுவுக்கு எதிராக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஜோத்பூர் நீதிமன்றம் நீதிபதி தெரிவித்துள்ளார்.