‘பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடல் லீக்…!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் திடீரென தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி