சென்னை:

பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டள்ள வெரிசான் டேட்டா சர்வீஸஸ் நிறுவன தொழிலாளர் சங்க பிரநிதிகள், நிர்வாத்துடன் சென்னை தொழிலாளர் நல துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவில் செயல்படும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் நிறுவனத்தில் ஆயிரத்து 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது.

சென்னை, ஐதராபாத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகளவில் பணியிழக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் தொழிற்சங்கம் சார்பில் சுமார் 1,200 பேர் பணியிழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகளில் சுமார் 7 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவன ஐதராபாத் ஹை-டெக் சிட்டி கிளையில் பணியாற்றும் 250 பொறியாளர்கள் வேலை இழக்கிறார்கள். சென்னையில் சுமார் ஆயிரம் பேர் வரை வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஊழியர்கள் தாமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ராஜினாமா செய்ய மறுக்கும் ஊழியர்களை நிறுவன பாதுகாவலர்கள் தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழு ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா தொழிலாளர் நலத்துறையின் உதவியை நாடினர்.

இதை தொடர்ந்து சென்னையில் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர். நிர்வாகத்தினர் தங்களது தரப்பு விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

‘‘சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாறுதலால் சில பணி இடங்கள் முற்றிலும் நீக்கப்ப டுகின்றன. சில பணிகளுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான வாய்ப்புமே இல்லதாத காரணத்தால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்று அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.