‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகும்….!

 

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘பிகில்” படத்தின் பாடல் வெளியீட்டுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. மிகப்பிரமாண்ட ஏற்பாடுகளுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் 15 அல்லது 22 தேதியில் நடைபெறும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஏர்.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நாளை வெளியாகும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தயாராக இருங்கள். நாளை அனைத்து சாதனையையும் வெறித்தனம் பாடல் முறியடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி