சென்னை:

டுத்த 48 மணி நேரம் கோவைக்கு மாவட்டத்துக்கு  மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம் அடைந்து, கொட்டோ கொட்டென்று மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில்,  தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்த நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் இயக்குனரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது இதன் காரணமாக  மேலும் 2 நாட்களுக்கு அதிதீவிர கன மழை பெய்யக்கூடும். தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனத்த மழை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், க டந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது. மேல்பவானியில் 45 செ.மீ., கோவை மாவட்டம் சின்ன கல்லாறில் 37 செ.மீ., வால்பாறையில் 26 செ.மீ. மழை பெய்துள்ளது.

தேவாலா 26, கூடலூர் 25, நடுவட்டம் 22, குன்னூர் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.