மூளையில் ரத்தக் கசிவு : காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ கே அந்தோணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ கே அந்தோணி நேற்று டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் தவறி கீழே விழுந்தார்.  அவர் உடனடியாக டில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.  அவருக்கு அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.