பிரபல இயக்குனர் மகேந்திரன் மரணம்

சென்னை

பிரபல தமிழ்ப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

பிரபல தமிழ்ப்பட இயக்குனர் மகேந்திரன் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் என்னும் திரைப்படம் இவருக்கு புகழை அளித்தது. அது மட்டுமின்றி முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது 79 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்

மகேந்திரனின் மரணச் செய்தியை அவர் மகன் ஜான் மகேந்திரன் அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இன்று மாலை 5 மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.