காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்

மூத்த பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி நேற்று ஸ்ரீநகரில் அவர் அலுவலகத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு  மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர்.  இங்குள்ள லால் சவுக் பகுதியில் உள்ள  ரைசிங் காஷ்மீர் என்னும் பத்திரிகையின் அலுவலகம் உள்ளது.   மூத்த பத்திரிகையாளரான ஷுஜாத் புகாரி இந்தப் பத்திரிகையில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இவர் நேற்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து ஒரு ரம்ஜான் விருந்துக்காக வெளியே கிளம்பினார்.  அப்போது அடையாளம் தெரியாத சிலர் அவ்ரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.   படுகாயம் அடைந்த ஷுஜாத் புகாரி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.   ஆயினும் சிகிச்சை பலனின்றி ஷுஜாத் புகாரி மரணம் அடைந்தார்.  ஷுஜாத் புகாரிக்கு காவலாக இருந்த இரு போலீஸ் கான்ஸ்டபிள்களும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஷுஜாத் புகாரியை சுட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.